சுடச்சுட

    

    இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: தஞ்சை மாவட்ட மீனவர்கள் 33 பேர் சிறைபிடிப்பு

    By dn  |   Published on : 21st March 2014 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    fishermen1

    தஞ்சை மாவட்ட மீனவர்கள் 33 பேரை அவர்களின் 10 விசைப்படகுகளுடன் இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை சிறைபிடித்து சென்றது வியாழக்கிழமை தெரிய வந்தது.

    தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (2 படகுகள்), வேல்முருகன், அஞ்சம்மாள், ஜோனஸ்ராஜ், நீலமணி, கருணாவேல், கஜேந்திரன், மல்லிபட்டினத்தைச் சேர்ந்த ஜமால்மைதீன், ரகுமத்துல்லா ஆகியோருக்குச் சொந்தமான 10 விசைப்படகுகளில் சேதுபாவாசத்திரம், பிள்ளையார்திடல், குப்பத்தேவன்வலசை, இரணியவலசை, காரங்குடா, மல்லிபட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குமார் (41), குமரேசன் (25), நீலகண்டன் (35), பாலு (35), ரெத்தினவேல் (20) உள்ளிட்ட 33 பேர் புதன்கிழமை அதிகாலை சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    கோடியக்கரை அருகே மாலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் அனைவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களின் படகுகளையும், மீன்பிடி வலைகளையும் கொண்டு சென்றனர்.

    வரும் 25-ம் தேதி இந்திய-இலங்கை மீனவர்களிடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், 33 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai