சுடச்சுட

    

    உழைப்பதோ நாற்பது; ஆனால் நிற்பதோ ஒன்று என்று நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில்தான் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எஸ். ஹைதர் அலி இவ்வாறு பேசினார்.

    அவர் மேலும் பேசியது:

    திமுக-வின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் விருப்பத்தின்பேரில் மயிலாடுதுறை தொகுதியில் நான் நிறுத்தப்பட்டுள்ளேன். எனது வெற்றி, திமுகவின் வெற்றி. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

    அவ்வாறு வெற்றி பெற்றால் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 3 ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை.

    திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிக்காக 40 தொகுதிகளிலும் உழைக்கும் நாங்கள் 1 தொகுதியில்தான் போட்டியிடுகிறோம். எங்களை வெற்றி பெறச் செய்வது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலையாய கடமை என்றார் ஹைதர் அலி.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai