சுடச்சுட

    

    குமரியில் பொன். ராதாகிருஷ்ணன், தென் சென்னையில் இல. கணேசன்

    By dn  |   Published on : 21st March 2014 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bjp_candidates

    தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் புதுதில்லியில் வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

    இதில், கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இல. கணேசன் தென் சென்னை தொகுதியிலும், சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

     

    வேட்பாளர்கள் பெயர், அவர்கள் போட்டியிடும் தொகுதி விவரம்:

    1. தென் சென்னை - இல. கணேசன்

    2. நீலகிரி (தனி) - எஸ். குருமூர்த்தி

    3. கோவை - சி.பி. ராதாகிருஷ்ணன்

    4. சிவகங்கை - எச். ராஜா

    5. ராமநாதபுரம் - குப்புராமு

    6. கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன்

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai