சுடச்சுட

  
  attack

  நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் வெள்ளிக்கிழமை கடலில் ராட்சத மீன் தாக்கியதில் பாதிக்கப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவருக்கு இந்திய கடற்படையினர் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

  புதுக்கோட்டை மாவட்டம்,ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் என்பவருக்கு சொந்தமான கண்ணாடியிழைப் படகு ஒன்றில் அவருடன் 5 மீனவர்கள் ஜெகதாப்பட்டினத்திலிருந்து வியாழக்கிழமை கடலுக்குச் சென்றனர்.

  வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்தபோது, வெள்ளிக்கிழமை காலை படகின் அருகே வந்த ராட்சத மீன் ஒன்று மீனவர்களை தாக்கியது. இதில் மீனவர் கா. குழந்தைவேலனுக்கு (45) வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வெளியேறியது.

  இதனால் மீனவர்கள் ராட்சத மீனிடமிருந்து தப்பிக்க அவசர கால அழைப்பை பயன்படுத்தி தகவல் அளித்தனர். இதையடுத்து இந்திய கடற்படை தோப்புத்துறை முகாமிலிருந்து அலுவலர் கே.எஸ்.எஸ். குமார், வீரர்கள் எஸ்.எஸ். யாதவ், பிரதீப்குமார் உள்ளிட்டோர் விரைவு படகில் சென்று மீனவர்களுக்கு உதவினர்.காயம் அடைந்த மீனவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai