Enable Javscript for better performance
\\\"சுயேச்சை சின்னத்தில் போட்டி\\\'- Dinamani

சுடச்சுட

    
    thirumalavan

    சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:

    கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இதே தொகுதியில் நட்சத்திர சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இந்தத் தேர்தலிலும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவேன். எந்த சின்னம் என்பது தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று பின்னர் அறிவிக்கப்படும். சிதம்பரம் தொகுதியில் ஏப்ரல் 5-ம் தேதி முதல் வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கவுள்ளேன்.

     

    ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம்: விளம்பரங்கள், மேடை அமைப்பது, பதாகைகள் வைப்பது உள்ளிட்ட அனைத்திலும் விதிமுறைகளுக்கு புறம்பாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai