சுடச்சுட

  

  டி.ஆர். பாலுவுக்கு ஆதரவாக புத்தகம்: அச்சகத்துக்கு விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் கடிதம்

  By dn  |   Published on : 21st March 2014 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவுக்கு ஆதரவாக "மன்னை மக்கள் மன்றம் அமைப்பு' அஞ்சல் மூலம் வாக்காளருக்கு அனுப்பும் சாதனை புத்தகம் குறித்து அச்சடித்த அச்சகத்துக்கு விளக்கம் கேட்டு, மன்னார்குடி சட்டப்பேரவைத் தேர்தல் அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார்.

  "மக்கள் பணியில் மண்ணின் மைந்தன்' என்ற தலைப்பில் திமுக சார்பில் மக்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் டி.ஆர். பாலு இருந்தபோது அவர் வகித்த அமைச்சர் பதவி, ரயில்வே நிலைக் குழுத் தலைவர் பதவி ஆகியவற்றின் மூலம் செய்த பணிகள் குறித்து 32 பக்கம் மல்டி கலரில் புத்தகமாக அச்சடித்து மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவைக்கு உள்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

  இந்தப் புத்தகத்தை "மன்னை மக்கள் மன்றம்' என்ற அமைப்பு மூலம் அனுப்பப்படுவதாக அனுப்புநர் முகவரியில் அச்சிடப்பட்டுள்ளது.

  இந்த பிரசார புத்தகம் குறித்து, மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவைத் தேர்தல் அலுவலர் சுப்பு, அந்த புத்தகத்தில் இருந்த எல்லோ என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு 98416 20444 என்ற எண் அச்சிடப்பட்டிருந்து. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டபோது, கைப்பேசி எண் சென்னையில் உள்ள அச்சகம் என்பது தெரிய வந்ததாம்.

  மேலும், இந்த புத்தகத்தை அச்சுக்கு தந்தவர்கள் யார்? எவ்வளவு புத்தகங்கள் அச்சிட்டுள்ளனர், இதற்கு ஆன தொகை எவ்வளவு என்று கேட்டு, இதற்கான பதிலை கடிதம் மூலம் எங்களுக்கு (தேர்தல் அலுவலருக்கு) அனுப்ப வேண்டும் என தெரிவித்திருப்பதுடன் அந்த நிறுவனத்துக்கு முறைப்படி கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai