சுடச்சுட

    
    hc

    மக்களவைத் தேர்தல் முடியும் வரை பாதுகாப்பு வழங்கக் கோரி தொல் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் நடத்த உள்ளேன். ஜாதி ரீதியாக எனக்கு பலர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

    நான் வெளியில் சென்றபோது பலமுறை என் மீது தாக்குதல் நடத்த முயற்சிகள் நடந்துள்ளன. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக பிரசாரம் நடத்தும்போது என் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. அதனால், எனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி போலீஸாரிடம் மனு அளித்தேன்.

    ஆனால் என் மனு மீது பரிசீலனை செய்யவில்லை. எனவே, மக்களவைத் தேர்தல் முடியும் வரை எனக்கு பாதுகாப்பு வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன்பு வியாழக்கிழமை (மார்ச் 20) விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு வரும் 25-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai