பா.ஜ.க. கூட்டணியில் நீடிக்கிறோம்: ஏ.சி. சண்முகம்
By dn | Published on : 21st March 2014 03:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

பாஜக கூட்டணியில் நீடிப்பதாக புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.
பாஜக கூட்டணியில் இணைந்துள்ள புதிய நீதிக் கட்சிக்கு தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. தொகுதிப் பங்கீட்டை அறிவிப்பதற்காக வியாழக்கிழமை சென்னை வந்த பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை, ஏ.சி. சண்முகம் சந்தித்துப் பேசினார்.
ஆனாலும், தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்ட கூட்டத்தில் ஏ.சி. சண்முகம் பங்கேற்கவில்லை. இதனால் புதிய நீதிக் கட்சி இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து ஏ.சி. சண்முகத்திடம் கேட்டபோது, பாஜக கூட்டணியில் தொடர்வதாகவும், வேலூர் தொகுதியில் பாஜக சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.