சுடச்சுட

    
    train_halt

    பணி ஓய்வு வழங்கப்படாததால் மன அழுத்தம் காரணமாக கடம்பத்தூரில் மின்சார ரயிலை நிறுத்திவிட்டு டிரைவர் ஓட்டம் பிடித்தார்.

    இதனால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையிலிருந்து அரக்கோணத்துக்கு வியாழக்கிழமை காலை 10.40 மணியளவில் புறநகர் மின்சார ரயில் (எண் 43409), கடம்பத்தூர் ரயில் நிலையம் வந்தடைந்தது.

    ரயில் நிலையத்தில் 1-வது தண்டவாளத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் கடம்பத்தூரில் இருந்து 3-வது தண்டவாளத்தில் ரயில் இயக்கப்பட்டது.

    இதனிடையே அந்த ரயில் ஓட்டுநருக்கு கடந்த 3 நாள்களாக பணி ஓய்வு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பணிச்சுமை காரணமாக அவர் மன அழுத்தத்தில் இருந்தாராம்.

    இந்நிலையில் கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்திய டிரைவர், உயரதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னால் இதற்கு மேல் ரயிலை செலுத்த முடியாது எனக் கூறியதாக தெரிகிறது.பின்னர் ரயிலை இயக்காமல் அவர் அங்கேயே நின்றுள்ளார்.

    இந்நிலையில் சுமார் 25 நிமிடங்கள் ஆகியும் ரயில் எடுக்கப்படாததால் ரயிலை விட்டு இறங்கிய பயணிகள், டிரைவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அச்சமடைந்த டிரைவர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    இதுகுறித்து ரயில்நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருவள்ளூர் நிலைய மேலாளர் ராமானுஜமேனன் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் அங்கு வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஆத்திரமடைந்த பயணிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    பின்னர் சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் டிரைவரை வரவழைத்து, பிற்பகல் 12.30 மணியளவில் புறநகர் மின்சார ரயில் இயக்கப்பட்டது.

    இச்சம்பவத்தால் கடம்பத்தூர் ரயில்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai