சுடச்சுட

  
  karunanidhi

  இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

  இந்திய, இலங்கை மீனவர்களிடையே மார்ச் 25-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இதை திசை திருப்பி குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வை இலங்கை அரசு அரங்கேற்றியுள்ளது.

  ராமேசுவரம் மண்டபம் பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கைக் கடற்படையினர் சுற்றி வளைத்து, முதலில் அங்கிருந்து சென்றுவிடுமாறு எச்சரித்துள்ளனர்.

  இதைத் தொடர்ந்து கடலில் வீசப்பட்ட வலைகள் மற்றும் மீன்களுடன் புறப்படத் தயாரானபோது, ரோந்து கப்பல்களில் இருந்து இலங்கைக் கடற்படையினர் திடீரென்று தமிழக மீனவர்களின் படகுகளில் இறங்கி, படகுகளில் இருந்த வலைகளை அறுத்தெறிந்துள்ளனர்.

  5 படகுகளைச் சிறைபிடித்துள்ளனர். அவற்றில் இருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.

  மேலும் புதுக்கோட்டை, காரைக்கால் மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகளில் 12 படகுகளுடன் 50 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  இந்த நிகழ்வுகள் இலங்கை அரசின் ஒப்புதலின்றி நடந்திருக்க முடியாது. உண்மையில் இலங்கை அரசு இந்தப் பிரச்னையில் ஒரு தீர்வு ஏற்பட வேண்டுமென்று கருதுமேயானால், இப்படிப்பட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதில் அர்த்தமே இல்லை.

  எனவே இந்திய அரசையும், தமிழக அரசையும், தமிழக மீனவர்களையும் ஏமாற்றும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம்தான் ஏற்படுகிறது.

  பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இப்படிப்பட்ட செயல்களில் இலங்கைக் கடற்படை ஈடுபடுவதும், அது தொடர்பாக இந்திய அரசு எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பதும் மிகுந்த கண்டனத்துக்கு உரியதாகும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai