Enable Javscript for better performance
முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் மாற்றம்: அதிமுக அறிவிப்பு - Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் மாற்றம்: அதிமுக அறிவிப்பு

    By dn  |   Published on : 21st March 2014 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya

    முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பிரசாரத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 1 ஆம் தேதி புதுச்சேரியில் பிரசாரம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மார்ச் 27 ஆம் தேதியன்றே அவர் புதுச்சேரியில் பிரசாரம் செய்ய இருக்கிறார். மேலும், சில தொகுதிகளில் அவர் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களின் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன.

    இது குறித்து, அதிமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

    மார்ச் 21: விருதுநகர்-அண்ணாமலையார் நகர், சிவகாசி-திருத்தங்கல் நெடுஞ்சாலை, திருத்தங்கல் நகரம்.

    சிவகங்கை-போக்குவரத்து நகர், ஆவின் பால் பண்ணை மேல்புறம், காரைக்குடி.

    மார்ச் 23: கடலூர்-மஞ்சை நகர் மைதானம், கடலூர்.

    விழுப்புரம் (தனி)-ஆவின் பால்பண்ணை எதிரில், திருச்சி பைபாஸ் சாலை-விழுப்புரம் செல்லும் வழி.

    மார்ச் 25: திண்டுக்கல்-அங்குவிலாஸ் விளையாட்டுத் திடல், பழனி சாலை, திண்டுக்கல்.

    தேனி-தேனி-ஆண்டிபட்டி சாலை, கோவில்பட்டி ஊராட்சி, ஆண்டிபட்டி ஒன்றியம்.

    மார்ச் 27: புதுச்சேரி-உப்பளம் துறைமுக வளாகம், புதுச்சேரி.

    மார்ச் 28: மதுரை-பாண்டி கோயில் திடல், ரிங் ரோடு, மதுரை.

    மார்ச் 29: ராமநாதபுரம்-ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்.

    ஏப்ரல் 1: பொள்ளாச்சி-சி.ஐ.டி.மேடு, ஆச்சிப்பட்டி ஊராட்சி, பொள்ளாச்சி.

    ஏப்ரல் 3: நாமக்கல்-கருப்பட்டிபாளையம் பிரிவு, கிரீன்பார்க் பள்ளி அருகில், நாமக்கல்.

    சேலம்-போஸ் மைதானம், சேலம்.

    ஏப்ரல் 5: தஞ்சாவூர்-புதிய பஸ் நிலையம் அருகில், தஞ்சாவூர் நகராட்சி மைதானம்.

    திருச்சி-இடமலைப்பட்டி புதூர் மைதானம், திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி.

    ஏப்ரல் 8: அரக்கோணம்-அம்மூர் பேரூராட்சி, ராணிப்பேட்டை சட்டப் பேரவை தொகுதி.

    திருவள்ளூர் (தனி)-சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை, கவரப்பாளையம், ஆவடி.

    ஏப்ரல் 10: நீலகிரி (தனி)-சிறுமுகை நான்கு ரோடு, தேரம்பாளையம், காரமடை ஒன்றியம்.

    ஏப்ரல் 11: திருநெல்வேலி-திருநெல்வேலி மாநகராட்சித் திடல்.

    ஏப்ரல் 13: கரூர்-திருவள்ளுவர் விளையாட்டு மைதானம், கரூர்.

    பெரம்பலூர்-தாத்தையங்கார்பேட்டை சாலை, முசிறி பேரூராட்சி.

    ஏப்ரல் 15: ஆரணி-ஆரணி மைதானம், செய்யார்.

    வேலூர்-காட்டுக்கொல்லை, இடையன்காடு ஊராட்சி.

    ஏப்ரல் 17: கிருஷ்ணகிரி-பூசாரிப்பட்டி கூட்டு ரோடு, வரட்டனம்பள்ளி மெயின் ரோடு, கிருஷ்ணகிரி.

    தருமபுரி-தருமபுரி பென்னாகரம் சாலை, மேம்பாலம் அருகில்.

    ஏப்ரல் 19: மத்திய சென்னை, வட சென்னை.

    ஏப்ரல் 21: ஆலந்தூர், தென் சென்னை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai