சுடச்சுட

    
    alarigi

    மதுரையைத் தொடர்ந்து, ராஜபாளையம், ஆரணி, தஞ்சையில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்த திமுக தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலர் மு.க. அழகிரி முடிவு செய்துள்ளார்.

    மதுரையில் திங்கள்கிழமை நடந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய அழகிரி, தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்தப் போவதாகக் கூறினார். இதற்கிடையே, அழகிரியுடன் கட்சியினர் தொடர்பு வைத்துக் கொண்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் புதன்கிழமை அறிவித்திருந்தார். இந்த கூட்டத்துக்குப் பிறகு கட்சித் தலைமை சமாதானத்துக்கு இறங்கிவரும் என அழகிரி ஆதரவாளர்கள் நம்பியிருந்தனர். ஆனால், கட்சித் தலைமையின் அறிவிப்பு அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அழகிரியின் ஆதரவாளர்கள் பலரும் டி.வி.எஸ். நகரில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    கட்சித் தலைமை அறிவிப்பு குறித்து எவ்வித அச்சமும் இல்லை என்று அழகிரி ஏற்கெனவே கூறியிருக்கிறார். எது எப்படி இருந்தாலும், அழகிரியைச் சந்திப்பதையும், அவரது கட்டளைப்படி நடப்பதையும் யாராலும் தடுக்க முடியாது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    மதுரையைத் தொடர்ந்து மார்ச் 23 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மார்ச் 26 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி தஞ்சாவூரிலும் ஆதரவாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    அதன் பிறகு அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளார் என்று ஆதரவாளர்கள் கூறினர்.

    அழகிரியின் பேச்சுக்கு எவ்வித பதில் கிடைக்காத நிலையில், திமுக தலைவர் கருணாநிதி பிரசாரத்துக்காக மதுரை வரவுள்ள நிலையில், அதைத் தவிர்த்துவிட்டு அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai