சுடச்சுட

  
  ranjathsingh_rangaswamy

  சென்னை வந்த பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை, புதுச்சேரி முதல்வரும் என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான என். ரங்கசாமி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுச்சேரி யூனியன்பிரதேசத்தில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளது.

  அங்குள்ள ஒரே தொகுதியான புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

  இந்நிலையில் தொகுதிப் பங்கீட்டை அறிவிப்பதற்காக சென்னை வந்த பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை ரங்கசாமி சந்தித்துப் பேசினார். அப்போது புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்ய அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai