சுடச்சுட

  

  விலைவாசி உயர்வை அதிமுக அரசு கட்டுப்படுத்தவில்லை: மு.க. ஸ்டாலின்

  By dn  |   Published on : 21st March 2014 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  stalin_canvas

  அதிமுக அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.

  தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து, தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் வியாழக்கிழமை மாலை பிரசாரத்தை தொடங்கி அவர் மேலும் பேசியது:

  தேர்தலுக்கு மட்டுமே வந்து செல்பவர்கள் நாங்கள் அல்லர். என்றைக்கும் உங்களோடு கலந்து பிரச்னைகளுக்காக வாதிடுபவர்கள் நாங்கள்.

  ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றிச் சிந்திப்பவர் திமுக தலைவர் கருணாநிதி.

  ஆனால், ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் மட்டுமே வருவார். அதுவும், தனி விமானத்தில் அல்லது ஹெலிகாப்டரில் பறந்து வந்து சென்று விடுவார்.

  ஐந்து முறை முதல்வராக இருந்து சிறப்பாக ஆட்சி செய்த திமுக தலைவர் கருணாநிதி மக்களுக்காக எண்ணற்ற நல்லத் திட்டங்களைச் செயல்படுத்தினார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார்.

  ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 3 மாதங்களில் மின் பற்றாக்குறையைச் சீர் செய்வேன் என்றார் ஜெயலலிதா.

  ஆனால், 3 ஆண்டுகளாகியும் மின் வெட்டு சீர் செய்யப்படவில்லை. மின் கட்டணமும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. விவசாயிகளுக்கு கரும்பு, நெல் விலையை உயர்த்தவில்லை. அத்தியாவசிய பொருள்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. கட்டுமானப் பொருள்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

  விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாத அதிமுக ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். மக்கள் திமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.

  அப்போது, அவருடன் வேட்பாளர் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai