சுடச்சுட

    

    தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் வெள்ளிக்கிழமை 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.

    கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மார்ச் மாதத்திலேயே தமிழகத்தின் பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.

    தருமபுரி, மதுரை, சேலம், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. மார்ச் மாதத்திலேயே கடுமையான வெயில் கொளுத்தும் நிலையில், வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

    இனிவரும் நாள்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பதிவான வெயில் (டிகிரி பாரன்ஹீட்டில்):

    சேலம் 102

    வேலூர், திருச்சி 101

    தருமபுரி, மதுரை 100

    கோவை,

    பாளையங்கோட்டை 99

    சென்னை மீனம்பாக்கம் 98

    கரூர் பரமத்தி 97

    சென்னை நுங்கம்பாக்கம் 96

    கடலூர், கன்னியாகுமரி 94

    தூத்துக்குடி 91

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai