Enable Javscript for better performance
ஆரத்தி எடுக்க பணம்: நடிகர் வையாபுரி மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    
    vaiyapuri

    பிரசாரத்தின்போது பணம் வழங்கியதாக நடிகர் வையாபுரி மீது போடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    போடி பகுதியில் வியாழக்கிழமை நடிகர்கள் தியாகு, வையாபுரி ஆகியோர் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.பார்த்திபனை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.

    அப்போது போடி புதூர் பகுதியில் வாக்கு சேகரித்தபோது, போடி நகர் காவல் நிலையம் அருகே ஒரு பெண் ஆரத்தி எடுத்தார். அப்போது அந்த பெண்ணுக்கு வையாபுரி பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போடி பகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் எஸ்.கே.குணசேகரன் போடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் போஜூ, நடிகர் வையாபுரி மீது தேர்தல் விதிகளை மீறி பணம் கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai