சுடச்சுட

    
    gnan

    ஆலந்தூர் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் வேட்பாளராக எழுத்தாளர் ஞாநி சங்கரன் போட்டியிடுகிறார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளராக 2011-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் தனது பதவியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜிநாமா செய்தார். இதனையடுத்து அந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    ஆலந்தூர் இடைத் தேர்தலில் அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட பிரதான கட்சிகள் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியும் அங்கு போட்டியிடுதாக தெரிவித்துள்ளது.

    அண்மையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞாநி சங்கரனை ஆலந்தூர் இடைத்தேர்தலில் நிறுத்த அக்கட்சி முடிவு செய்தது. அதற்கான அறிவிப்பை ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை (மார்ச் 21) வெளியிட்டது.

    அதிமுக (வெங்கட்ராமன்), திமுக (ஆர்.எஸ். பாரதி), தேமுதிக (ஏ.எம். காமராஜ்) உள்ளிட்ட கட்சி வேட்பாளர்களை எதிர்த்து ஆலந்தூர் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் அவர் போட்டியிட உள்ளார்.

    இதனைத் தொடர்ந்து சென்னை பெருங்குடியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் ஆலந்தூர் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், வேட்பாளர் ஞாநி சங்கரனை மாநில பிரசாரக்குழு ஒருங்கிணைப்பாளர் டேவிட் பரூண்குமார் அறிமுகம் செய்து வைத்தார்.

    இதனையடுத்து செய்தியாளர்களிடன் பேசிய ஞாநி சங்கரன் கூறியது: தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்தனர். அதேபோல் தமிழ்நாட்டிலும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி மக்கள் கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

    திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்ததால் மதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்து பார்த்தார்கள். ஆனால், அந்தக் கட்சிகள் மீண்டும் திமுக, அதிமுக கட்சிகளிடம் கூட்டணி சேர்ந்ததால் மக்கள் ஏமாற்றப்பட்டனர். தற்போது ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் வாய்ப்பு தருவார்கள் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai