சுடச்சுட

  

  ஆலந்தூர் இடைத்தேர்தல்: காந்தியவாதி சசிபெருமாள் போட்டி

  By dn  |   Published on : 22nd March 2014 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sasi_perumal

  ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளதாக காந்தியவாதி சசிபெருமாள் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சேலம் மாவட்டம், எளம்பிள்ளை அருகேயுள்ள இ.மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் காந்தியவாதி சசிபெருமாள் (57).

  இவர், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி, ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் மது, ஊழலுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் சுயேச்சையாகப் போட்டியிட மார்ச் 29-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

  தமிழ்நாட்டில் காமராஜர் தலைமையில் கள்ளுக் கடைகளை மூடக் கோரி நடைபெற்ற அறப்போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் சசிபெருமாள். இவர் மதுவை ஒழிக்க வலியுறுத்தி சேலத்திலிருந்து சென்னைக்கு நடைபயணமும், சென்னையில் 34 நாள்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai