சுடச்சுட

    

    இரும்புத் தாது எடுக்க எதிர்ப்பு: 51 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

    By dn  |   Published on : 22nd March 2014 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அருகே கவுத்தி, வேடியப்பன் மலைகளில் இருந்து இரும்புத் தாது எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 51 கிராமங்களைத் சேர்ந்த மக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை, கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே கவுத்தி-வேடியப்பன் மலைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் இல.அழகேசன் தலைமை வகித்தார்.

    அரூர் எம்.எல்.ஏ. பி.டில்லிபாபு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் எஸ்.கருணா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    இரும்புத் தாது வெட்டி எடுக்கப்பட்டால், காலம் காலமாக வாழ்ந்து வரும் 51 கிராமங்களைச் சேர்ந்த நம் சந்ததி அழிக்கப்படும். எனவே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டப்பேரவையில் குரல் கொடுப்பேன் என்று எம்.எல்.ஏ. பி.டில்லிபாபு பேசினார். 51 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இரும்புத் தாது வெட்டி எடுக்க மத்திய-மாநில அரசுகள் அனுமதி வழங்கக் கூடாது. அனுமதி வழங்குவதற்கு முன்பு பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    முடிவில் தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை கோட்டாட்சியரிடம் கொடுத்து 51 கிராம மக்களும் கலைந்து சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai