Enable Javscript for better performance
கடலில் மீன்களை கவர பசுந்தழைகளுடன் செல்லும் மீனவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    கடலில் மீன்களை கவர பசுந்தழைகளுடன் செல்லும் மீனவர்கள்

    By dn  |   Published on : 22nd March 2014 11:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    boat_tree

    கடலில் விலை மதிப்புள்ள பெரிய மீன்களை அதிகளவில் பிடிக்கும் வகையில், காரைக்கால் மீனவர்கள் படகில் மரக்கிளைகளை ஏற்றிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

    பொதுவாக, மீனவர்கள் 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமரத்தில் மீன்பிடிக்க செல்லும்போது, குறிப்பாக கோலா மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மரக்கிளைகள் மற்றும் தழைகளை கொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீன் வருகைக்காக காத்திருப்பர். அந்த முறையை தற்போது காரைக்காலில் சில மீனவர்கள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

    காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் புங்கன் மரக்கிளைகளை வெட்டி, பைபர் படகில் கடலுக்குள் சனிக்கிழமை கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறியது: கடலில் சுமார் 15, 20 கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்று மரக்கிளைகளை ஒரு இடத்தில் போட்டுவிட்டு வந்து விடுவோம். ஜிபிஎஸ் கருவி மூலம் மரக்கிளைகள் போட்ட இடத்தை அறிந்து வைத்திருப்போம். 10 அல்லது 15 நாள்களுக்குப் பிறகு அப்பகுதிக்கு சென்று பார்ப்போம். அப்போது, மரக்கிளைகள் போட்ட இடத்தை சுற்றி சிறிய, பெரிய மீன்கள் ஏராளம் இருக்கும். அவற்றை பிடித்து வருவோம். இதை சோதனை முறையில் செய்து பார்த்ததில் வெற்றி கிடைத்ததால் அந்த மீன்பிடி முறையை தொடரவுள்ளோம் என்றனர்.

    கடலோரக் காவல் நிலைய போலீஸார் தடுப்பு : இதுகுறித்து கடலோரக் காவல் நிலைய போலீஸாரிடம் கேட்டபோது, மரக்கிளைகளை கொண்டு செல்வதால், பசுமை இழப்பு ஏற்படுமென வனத் துறை கூறியுள்ளது.

    இது தவறான செயல் என கூறி மீனவர்களை தடுத்துள்ளோம் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai