சுடச்சுட

    

    கறி விருந்து நடைபெறுவதைப் பார்வையிடச் சென்ற வருவாய் ஆய்வாளரை மிரட்டியதாக அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ஜான்தங்கம் கடந்த புதன்கிழமை பேச்சிப்பாறை பகுதியில் வாக்கு சேகரித்தார். மதிய இடைவேளையில் அதிமுக பிரமுகர் மனோகரனின் வீட்டில் அவர்கள் உணவு அருந்தினராம். அப்போது தேர்தல் அலுவலர்களான குலசேகரம் வருவாய் ஆய்வாளர் பாரதி உள்ளிட்டோர் அங்கு சென்றனர். அப்போது, அதிமுகவினருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இப்பிரச்னை தொடர்பாக குலசேகரம் காவல் நிலையத்தில் பாரதி புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் ஜான்தங்கம் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai