சுடச்சுட

    

    கோவையில் வேட்பாளரை மாற்றக் கோரி பாஜகவினர் அதிரடி உண்ணாவிரதம்

    By dn  |   Published on : 22nd March 2014 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bjp

    மக்களவைத் தொகுதி வேட்பாளரை மாற்றக் கோரி, வெள்ளிக்கிழமை கோவையில் பாஜகவினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினர்.

    பாரதிய ஜனதா கட்சியின் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அக் கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டார்.

    அவரை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உடனடியாக வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும், கோவை மாநகர் மாவட்டத் தலைவர் நந்தகுமார் தலைமையில் அக் கட்சியினர் 100-க்கு மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை முதல், கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து மாநகர் மாவட்டத் தலைவர் பி.நந்தகுமார் கூறியதாவது:

    இன்றைய சூழலில் நல்ல நிலையில் கட்சி வளர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில் கட்சி நடவடிக்கையில் நீண்ட நாள்களாக இல்லாதவரை வேட்பாளராக கட்சி அறிவித்துள்ளது, கடந்த பல ஆண்டுகளாக கட்சி வளர்ச்சிக்காக உழைத்த தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

    கட்சி வளர்ச்சிக்காக உழைத்த ஒருவரையே கோவையில் வேட்பாளராக நிறுத்த வேண்டும். அவ்வகையில் கோவையில் கட்சி வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களில் கட்சியின் மாநில செயலாளராக உள்ள ஜி.கே.செல்வகுமார் முக்கியமானவர். அனைத்து கட்சி நிகழ்வுகள், தொண்டர்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் அவர் பங்கெடுத்துள்ளார். அவருக்கு வாய்ப்பு அளிக்கலாம்.

    அவரை விடுத்து கட்சிப் பணி புரிந்த எவருக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்பட்டால் அதை வரவேற்போம். அடிமட்டத் தொண்டர்களின் எண்ணமாகவும் அதுவே உள்ளது. இதைப் பிரதிபலிக்கும் விதமாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளோம். மறுஅறிவிப்பு வரும் வரை இது தொடரும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai