சுடச்சுட

    

    சாலை விபத்து: திருச்சி மக்களவை உறுப்பினரின் உறவினர்கள் இருவர் சாவு

    By dn  |   Published on : 22nd March 2014 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dead

    திருச்சியில் வியாழக்கிழமை நள்ளிரவு நேரிட்ட சாலை விபத்தில் திருச்சி மக்களவை உறுப்பினர் ப. குமாரின் மாமியார், உறவினர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

    திருச்சி கொட்டப்பட்டு நேரு நகரைச் சேர்ந்தவர் சங்கராந்தி (65). ஒப்பந்ததாரர். இவரது மனைவி சந்திரா (60). கல்லணைப் பகுதியைச் சேர்ந்த இவர்களின் உறவினர், சென்னை புறவழிச் சாலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

    தகவலறிந்து சங்கராந்தி குடும்பத்தினர் கார்களில் புறப்பட்டு மருத்துவமனைக்குச் சென்று பார்த்தனர்.

    பிறகு இரவு 11.30 மணியளவில் வீடு திரும்பினர். சங்கராந்தி உள்ளிட்டோர் ஒரு காரிலும், சந்திரா மற்றொரு காரிலும் புறப்பட்டனர். காரை சந்திராவின் சகோதரர் மகன் மருதுசெல்வம் (31) ஓட்டினார். கார் பொன்மலை ரயில் பாலத்தைக் கடந்து ஜி கார்னர் பகுதியில் ஒரு திருப்பத்தில் திரும்பியபோது சாலையின் குறுக்கே மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் திடீரென ஓடியுள்ளார்.

    அவர்மீது மோதாமலிருக்க மருதுசெல்வம் காரை வேகமாக திருப்பியுள்ளார். இதில் நிலைதடுமாறிய கார் சாலையோரமிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சந்திரா, மருதுசெல்வம் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை பின்தொடர்ந்து சென்ற சங்கராந்தி உள்ளிட்டோர் இருவரையும் மீட்டு தென்னூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மருதுசெல்வம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சந்திராவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும், அவர் வெள்ளிக்கிழமை அதிகாலை இறந்தார்.

    இறந்த சந்திரா, திருச்சி மக்களவை உறுப்பினரும், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் ப. குமாரின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்த சந்திராவின் உடலுக்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

    விபத்து குறித்து திருச்சி மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வு (தெற்கு) போலீஸார் வழக்குப்ப பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai