சுடச்சுட

  
  gnadesigan

  தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரம் செய்ய இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார்.

  இது குறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

  தமிழகத்தில் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 9 தொகுதிகளுக்கும் ஓரிரு நாளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் கணிசமான வாக்குகளைப் பெறும்.

  தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர். அவர்கள் வரும் தேதியும், இடமும் விரைவில் அறிவிக்கப்படும். தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் இலங்கைத் தமிழர் பிரச்னை எதிரொலித்தது இல்லை. இந்தத் தேர்தலிலும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உதவி செய்துள்ளது. இதனை மக்களிடம் பிரசாரம் செய்வோம்.

  பாஜக தலைமையில் ஜாதி, மத உணர்வு கொண்ட கட்சிகள் இணைந்துள்ளன. கொள்கை முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ள இந்தக் கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என்றார் ஞானதேசிகன்.

   

  சத்தியமூர்த்தி பவன் முற்றுகை

  சிதம்பரம் (தனி) தொகுதி வேட்பாளர் டாக்டர் வள்ளல்பெருமானை மாற்றக்கோரி, அங்கு போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த மணிரத்னத்தின் ஆதரவாளர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். அவர்களை தனது அறைக்கு அழைத்து ஞானதேசிகன் சமாதானப்படுத்தினார்.

  இது குறித்து ஞானதேசிகனிடம் கேட்டபோது, மணிரத்னம் சிறந்த வேட்பாளர். சிதம்பரம் தொகுதிக்கு அவரது

  பெயர்தான் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் மாறியுள்ளது. இது குறித்து கட்சி மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai