சுடச்சுட

    
    karunanidhi

    திமுகவில் நடிகை குஷ்பு புறக்கணிக்கப்படவில்லை என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    திமுகவின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரான குஷ்புவை ஓரம் கட்டுவதாகவும் தேர்தல் பிரசாரம் செய்ய தடை செய்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

    உண்மையில் குஷ்பு புறக்கணிக்கப்படவில்லை. அவருடைய தேர்தல் பிரசாரத்துக்குத் தடை விதிக்கப்படவும் இல்லை.

    திமுகவினர் அனைவரும் என்னுடைய சுற்றுப் பயண விவரம் வெளி வருவதற்காக காத்திருந்தனர்.

    எந்த தேதியில் நான் எந்த ஊரில் கலந்து கொள்கிறேன் என்பதைப் பொருத்து, அவர்களுடைய நிகழ்ச்சிகளை வகுத்துக் கொள்வதற்காகத்தான் தாமதம்.

    தற்போது என்னுடைய சுற்றுப்பயணம் உறுதிப்படுத்தப் பட்டுவிட்டது. அதனால் மற்ற பேச்சாளர்களின் பயணங்களும் தலைமைக் கழகத்தால் வகுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

    மேலும் சங்கரன்கோவிலில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுக தேர்தல் அறிக்கையில் 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படாமல், மத்திய அரசின் ஏ,பி,சி.டி, ஆகிய பிரிவுகளில் உள்ள இடங்களில் இன்றைய நிலையில் 14 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    இதைத் தீர்க்க மத்திய அரசை திமுக ஏன் தட்டிக் கேட்வில்லை என்று கேள்வி எழுப்பியுள்

    ளார்.

    இடஒதுக்கீடு என்பது திமுகவின் மிக முக்கியமான கொள்கை. இட ஒதுக்கீட்டைப் பற்றி ஜெயலலிதா என்ன பேசினாலும், தேர்தலில் அது அவருக்கு கை கொடுக்காது என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai