சுடச்சுட

    
    bjp_pmk

    புதுவை தொகுதி என்.ஆர்.காங்கிரஸýக்குத்தான் என பாஜக அறிவித்து விட்டாலும் பாமகவுக்குத்தான் அத்தொகுதி ஒதுக்கப்படும் என பாமகவினரும் தொடர்ந்து பிடிவாதமா கூறி வருவதால், பாஜக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது.

    தமிழகத்தில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் விவரத்தை தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், சென்னையில் வியாழக்கிழமை அறிவித்தார். புதுச்சேரி பற்றி அவர் நேரிடையாக எதுவும் அறிவிக்கவில்லை.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி ராஜ்நாத் சிங்கை சந்தித்து விட்டு புதுச்சேரி திரும்பினார். என்ஆர்.காங்கிரஸாரும், பாஜகவினரும் புதுச்சேரி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் என்ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என ராஜ்நாத் சிங் அறிவித்துவிட்டதாக தெரிவித்தனர்.

    ஆனால் இதை பாமக உறுதியாக மறுத்து புதுச்சேரியில் பாமகதான் பாஜக கூட்டணியில் போட்டியிடும் என கூறியது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை காலை பாமக மாநில அமைப்பாளரும், வேட்பாளருமான அனந்தராமன் செய்தியாளர்களிடம் கூறியது:

    தமிழக பாஜக கூட்டணியில் பாமக உள்ளது. புதுச்சேரியை பொருத்தவரை பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம்பெறவில்லை. புதுச்சேரி எம்.பி. தொகுதி தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

    சென்னையில் நடந்த தொகுதி பங்கீடு அறிவிப்பின்போது முதல்வர் ரங்கசாமிக்கு மேடையில் இடம் தரப்படவில்லை. தொகுதி பங்கீடு என்பது அனைத்துக் கூட்டணி கட்சித் தலைவர்களையும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம்.

    தற்போது தமிழகத்தில் கூட்டணி முடிவு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஓரிருநாளில் பாஜக கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். பாமக தமிழகத்தில் 8 தொகுதியுடன் புதுச்சேரியையும் சேர்த்து வழங்க வேண்டும் என பாஜக தலைமையிடம் வலியுறுத்தியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பை பாஜக மேலிடம் அறிவிக்கும். புதுச்சேரியில் பாஜக என்.ஆர்.காங்கிரûஸ ஆதரித்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. புதுச்சேரியில் பாமக போட்டியிடுவது உறுதி. இதற்கான அறிவிப்பை பாமக தலைமை விரைவில் அறிவிக்கும் என்றார்.

    பாஜக அலுவலகத்தில் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள்: இந்நிலையில் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் மற்றும் கட்சி நிர்வாகிகள் 100 அடி சாலையில் உள்ள பாஜ அலுவலகத்துக்கு முதல் முறையாக வந்தனர். அவர்களை மாநிலத் தலைவர் விஸ்வேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். பாஜக, என்.ஆர். காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதுதொடர்பாக பாஜக தலைவர் விஸ்வேஸ்வரன் கூறியது:

    சென்னையில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் புதுச்சேரி தொகுதி அறிவிப்பு தொடர்பாக முதல்வர் ரங்கசாமியையும், பாஜக மற்றும் கூட்டணித் தலைவர்களையும் சந்தித்தார். அப்போது எங்கள் கூட்டணியில் புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டது. இதை தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரையும் தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைத்துள்ளோம். இதில் சுமூக முடிவு ஏற்படும். பாஜக கூட்டணி தொடர்பாக தற்போதுதான் பேசுகிறோம். பாமக தனித்து போட்டியிடும் என்பது தொடர்பாக கேட்கிறீர்கள். இப்போதுதான் பேச தொடங்கியுள்ளோம். கூட்டணிக்கு சாதகமாக அனைத்தும் நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    மேலிடம் அறிவிக்காததால் குழப்பம்: தமிழகத்தில் கூட்டணி முடிவானாலும் புதுச்சேரியில் பாஜக கூட்டணி முடிவுகளை கட்சி மேலிடத் தலைவர்கள் அறிவிக்காததால் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai