Enable Javscript for better performance
ராமேசுவரம் மீனவர்கள் 21 பேருக்கு ஏப்ரல் 4 வரை காவல்- Dinamani

சுடச்சுட

    

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 21 மீனவர்களை ஏப்ரல் 4-ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ராமேசுவரத்திலிருந்து மார்ச் 19-ஆம் தேதி தேவதாஸ், நாகராஜ், தங்கமணி ஆகியோரின் படகுகளில் செங்கோல்பாண்டி உள்பட 17 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மண்டபம் பகுதியை சேர்ந்த பத்ரப்பன் படகில் கோபால், சிவாஜி, சம்பத், கார்மேகம் ஆகிய 4 மீனவர்கள் சென்றனர்.

    இவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 21 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர், எல்லை தாண்டி மீன்பிடித்தாக வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை 21 பேரையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களை விசாரணை செய்த நீதிபதி (பொறுப்பு) யாகேஷ் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மீனவர்களை அனுராதபுரம் சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai