Enable Javscript for better performance
வாகனத் தணிக்கை: கேரளத்தை சேர்ந்தவரிடம் ரூ.43 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    வாகனத் தணிக்கை: கேரளத்தை சேர்ந்தவரிடம் ரூ.43 லட்சம் பறிமுதல்

    By dn  |   Published on : 22nd March 2014 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    thasildar

    சேலம் மாவட்டம், ஆத்தூரில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையின் போது, காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆத்தூர் மஞ்சினி கேட் அருகே பறக்கும் படை அலுவலர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த காரில் சோதனையிட்டதில் ரூ.43 லட்சம் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், பணத்துடன் வந்தவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பென்னி (40) என்பதும், ஆத்தூர் அருகே உள்ள தனியார் மூலிகை ஆலையில் மூலிகைகளை வாங்குவதற்காக வந்ததாகவும் தெரிவித்தார். இதற்காக ஆத்தூர் தனியார் வங்கியிலிருந்து பணத்தை எடுத்து வந்ததும் தெரிய வந்தது. பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆத்தூர் கோட்டாட்சியர் த.ஜெயராமிடம் ஒப்படைத்தனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, ஆத்தூர் அருகே செயல்படும் தனியார் நிறுவனத்துக்கு மூலிகைகளை வழங்கிய விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai