சுடச்சுட

  

  விருதுநகர் அருகே சாலை விபத்து: வழக்குரைஞர் உள்ளிட்ட 3 பேர் சாவு

  By dn  |   Published on : 22nd March 2014 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் அருகே கார் மோதிய விபத்தில் வழக்குரைஞர் உள்ளிட்ட 3 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.

  திருநெல்வேலியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் ராஜா. இவரது உறவினர்கள் சகுந்தலா, அவரது கணவர் மைக்கேல் டேவிட் மற்று ரியல் எஸ்டேட் தரகர் பேச்சிமுத்து, பேச்சிராஜ் ஆகியோர் சொந்த அலுவல் காரணமாக கோவைக்கு வியாழக்கிழமை சென்றுள்ளனர். அங்கிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் புறப்பட்டு திருநெல்வேலி நோக்கி சென்றனர். அப்போது, விருதுநகர் சூலக்கரை தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது நான்கு வழிச் சாலையோர இரும்பு தடுப்பில் கார் மோதியது.

  இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ராஜாவும், பேச்சிமுத்துவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில், பேச்சிராஜ், சகுந்தலா மற்றும் மைக்கேல் டேவிட் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மைக்கேல் டேவிட் உயிரிழந்தார். இதுதொடர்பாக சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai