சுடச்சுட

    

    திருநெல்வேலி மாநகர தி.மு.க.வைச் சேர்ந்த சுமார் 200 பேர், மதுரையில் திமுக தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலர் மு.க. அழகிரியை சனிக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    கட்சிக்கு உழைத்தவர்களுக்கு உரிய மரியாதையை திமுக கொடுக்கவில்லை. திமுகவில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை என்று, மதுரையில் நடைபெற்ற ஆதரவாளர்கள் கூட்டத்தில் அழகிரி குறிப்பிட்டார். இந்த நிலையில், பல இடங்களில் இருந்தும் திமுக அதிருப்தியாளர்கள் அழகிரி தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே, திருநெல்வேலி மாநகர திமுக முன்னாள் நகரச் செயலர் பாலகிருஷ்ணன் தலைமையில், சுமார் 200 பேர், மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள அழகிரியின் வீட்டுக்கு சனிக்கிழமை வந்தனர். பின்னர் அவர்கள், அழகிரியை சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்ததுடன், அவரது நடவடிக்கைகளுக்கு துணை நிற்பதாகவும் கூறினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai