சுடச்சுட

    

    இந்தியாவை ஐக்கிய நாடுகள் என்று அழைக்க வேண்டும்: தேர்தல் அறிக்கையில் மதிமுக வலியுறுத்தல்

    By dn  |   Published on : 23rd March 2014 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vaiko_canvas1

    இந்தியாவை ஐக்கிய நாடுகள் என அழைக்க வேண்டும் என்று மதிமுக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    எழும்பூரில் உள்ள தாயகத்தில் மதிமுகவின் தேர்தல் அறிக்கையை வைகோ சனிக்கிழமை வெளியிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான கூட்டணியாகும்.

    இது மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இந்த கூட்டணி தான் ஜெயிக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அதிமுக, திமுகவின் காலம் முடிந்து விட்டது. இந்தியாவில் இனிமேல் காங்கிரஸ் ஆட்சிக்கு வரக் கூடாது. காங்கிரஸ் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த கட்சியாகும்.

    இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றதற்கும், மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் காரணம்.

    முற்போக்கு கட்சிகள் உள்பட எந்தக் கட்சியும் காங்கிரஸýக்கு வெளியில் இருந்துகூட ஆதரவு கொடுக்கும் நிலை வந்துவிடக் கூடாது. காங்கிரஸால் நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை என்றார் வைகோ.

    தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்: இந்திய ஒன்றியம் என்று இந்த நாடு அழைக்கப்படுவதற்குப் பதிலாக இந்திய ஐக்கிய நாடுகள் என்று அழைக்கப்பட வேண்டும். இந்திய அரசியல் சாசனம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

    மத்திய, மாநில உறவுகள் சீரமைப்புக்கும், வலிமையான கூட்டாட்சி முறைக்கும், மாநில சுயாட்சி நிலைபெறவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    தமிழ் மொழியை, இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும்.

    தமிழீழம் அமைய ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும்.

    விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்.

    மரண தண்டனையை முற்றிலும் நீக்க வேண்டும்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மீனவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய ஆய்வுகள் நடத்தி, மீனவர்களின் அச்சம் தீர்க்கப்பட்டு, மாற்று வழித் தடத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    கூடங்குளத்தில் மேலும் அணு உலைகள் அமைக்க முயற்சிப்பதைத் தடுப்பதுடன், தற்போது இயங்கி வரும் அணு உலைகளையும் மூட வலியுறுத்தப்படும்.

    மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கிடக் குரல் கொடுப்போம்.

    புதுச்சேரி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி, தனி மாநிலத் தகுதி கிடைக்க ஆவன செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai