Enable Javscript for better performance
\\\"இனி தேர்தலில் போட்டியில்லை; காந்திய வழியில் மக்கள் தொண்டு\\\'- Dinamani

சுடச்சுட

    

    "இனி தேர்தலில் போட்டியில்லை; காந்திய வழியில் மக்கள் தொண்டு'

    By dn  |   Published on : 23rd March 2014 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chidambaram

    இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை; எனது உள்மனம் சொன்னபடி சொந்த ஊரில் தங்கி காந்திய வழியில் மக்களுக்குத் தொண்டாற்றப் போகிறேன் என்றார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம். புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    அவர் மேலும் பேசியது: கடந்த 30 ஆண்டுகளில் 8 தேர்தலைச் சந்தித்துவிட்டேன். 17 ஆண்டுகள் அமைச்சராக பதவி வகித்துள்ளேன். அதில் சாதாரண ஜவுளித் துறையோ, வேறு துறையோ கொடுத்திருந்தால் அமைதியாக பணியாற்றி இருக்க முடியும். தந்ததோ நிதியும், உள்துறையும். இதில் நாளொன்றுக்கு 18 மணி நேரம் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் கந்துவட்டி வாங்கியதில்லை. கட்டப்பஞ்சாயத்து, சாதிக்கலவரத்தில் ஈடுபட்டதில்லை. எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையில் பின்வாங்கியதில்லை. பிறரிடம் சல்லிக் காசுகூட வாங்கியது கிடையாது. அடுத்த எட்டு, பத்து ஆண்டுகள் வாழ்வதற்கு பெரிய பணம் தேவையில்லை. எனக்கு 68 வயதாகிவிட்டது. எத்தனை ஆண்டுகள் இனி உடல் வலிமையோடு சுற்றிவர முடியும்.

    மண்ணில் பிறந்தவர்கள் மண்ணுக்குத்தான் செல்ல வேண்டும். மறு ஜென்மம் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. எனவே, என் உள்மனம் சொன்னபடி சொந்தத் தொகுதியில் தங்கி, காந்திய வழியில் மக்களுக்கு பணியாற்றப் போகிறேன் என்றார் சிதம்பரம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai