சுடச்சுட

  

  என்.ஆர். காங்கிரஸூக்கு புதிய நெருக்கடி: ஆதரவு தர தேமுதிக திடீர் மறுப்பு

  By dn  |   Published on : 23rd March 2014 05:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vijayakanth_rangaswamya

  புதுவையில், பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர, தேமுதிக திடீரென மறுத்துள்ளது. அதேநேரத்தில், இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அனந்தராமன், சனிக்கிழமை பாஜக, தேமுதிக நிர்வாகிகளை அதிரடியாகச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

  பாஜக கூட்டணி சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு அதே கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக ஒப்புக் கொள்ளாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  தேமுதிகவால் நெருக்கடி: இந்நிலையில் இக்கூட்டணியிலுள்ள தேமுதிக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர மறுப்பதாக புதுவை அரசியல் வட்டாரத்தில் சனிக்கிழமை பரபரப்பாக பேசப்பட்டது.

  இதுகுறித்து தேமுதிக கட்சியின் மாநிலச் செயலர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: தமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் பாஜக கூட்டணியில் உள்ளோம். அண்மையில் சென்னை சென்று ராஜ்நாத்சிங்கை சந்தித்த புதுவை முதல்வர் ரங்கசாமி, இக்கூட்டணியில் பெரிய கட்சியாக உள்ள தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தை சந்திக்கவில்லை.

  இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் புதுச்சேரி தேமுதிக அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம் முதலில் எங்கள் கட்சித் தலைவரை மரியாதை நிமித்தமாக சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். எங்கள் தலைவரை மதிக்காதவர்களை நாங்கள் மதிக்கமாட்டோம். இதை கட்சித் தலைமையிடமும் தெரிவித்துள்ளோம்.

  கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தோம். வென்ற பிறகு ஜெயலலிதாவுக்கு ரங்கசாமி நன்றி தெரிவித்தார். எங்கள் கட்சித் தலைவருக்கு நன்றி தெரிவிக்க அவர் மறந்து விட்டார். கடந்த முறை நாங்கள் ஏமாற்றப்பட்டோம். இம்முறை ஏமாற மாட்டோம். சனிக்கிழமையும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் போனில் பேசினர். நாங்கள் தலைமையை சந்திக்க கூறிவிட்டோம். விரைவில் அடுத்தக்கட்ட முடிவு எடுப்போம் என்றார்.

  பாமக சந்திப்பு: இந்நிலையில் பாஜக அலுவலகத்துக்கு சனிக்கிழமை நண்பகல் பாமக மாநிலச் செயலர் அனந்தராமன் மற்றும் நிர்வாகிகள் வந்து மாநில நிர்வாகிகளை சந்தித்தனர்.

  இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் விஸ்வேஸ்வரன் கூறியது: மரியாதை நிமித்தமாக பாமக நிர்வாகிகள் சந்தித்தனர். புதுச்சேரியில் எங்கள் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுவது தொடர்பாக தெளிவாக கூறினோம். புதுச்சேரி தொகுதி குறித்த தங்களது நிலை பற்றி பாமக ஓரிரு நாள்களில் தெளிவுபடுத்தும்.

  புதுச்சேரியில் பாஜக கூட்டணியினர் தேர்தல் பணியை தொடங்குவர். ஓரிரு நாள்களில் இறுதி முடிவு எடுப்போம். எங்கள் இலக்கு காங்கிரûஸ வெல்வதுதான். அனைவரும் இணைந்து செயல்பட்டு அதை நிறைவேற்றுவோம் என்றார்.

  பாமக தரப்பில் விசாரித்ததற்கு, பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அனந்தராமன், பாஜக மற்றும் தேமுதிக நிர்வாகிகளை அவரவர் கட்சி அலுவலகத்துக்கு சென்று தனக்கு ஆதரவு தருமாறு கேட்டார் எனத் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai