சுடச்சுட

  
  vijai

  கடலில் மீன்வளம் நிறைந்துள்ள கச்சத்தீவு, மீனவர்களுக்கு அச்சத்தீவாகவே மாறிப்போய் விட்டது என ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டார்.

  ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வழக்குரைஞர் து.குப்புராமுவுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு அவரை அறிமுகம் செய்து வைத்து மேலும் பேசியது:

  திமுகவும் அதிமுகவும் கச்சத்தீவை மீட்போம் என்று சொல்கிறார்களே தவிர அதை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கடிதங்கள் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை துப்பாக்கியால் சுடுவதும், தாக்குவதும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது. சுருக்கமாகச் சொல்லப் போனால் கச்சத்தீவு அச்சத்தீவாகவே மாறிப் போய் விட்டது.

  பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் பிரசினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்படும் என அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் என்னிடம் தெரிவித்துள்ளார்.

  ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தொண்டி, மூக்கையூர் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்றும், மீனவர்களுக்கு விசைப்படகுகள் வாங்கிக் கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

  தான் கூறியதை ஜெயலலிதா இதுவரை செய்யவே இல்லை. அமைதி, வளம், வளர்ச்சி என்ற மூன்றையும் மையமாக வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஜெயலலிதா அமைதியாக இருக்கிறார்; வளமாக இருக்கிறார்; அதனால் அவர் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கிறார். ஆனால் மக்கள் வளர்ச்சியடைந்ததாக தெரியவில்லை.

  அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி தரும் ஜெயலலிதா, குடிநீரை ஒரு பாட்டில் ரூ.10க்கு விற்பனை செய்கிறார். ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ""அதைச் செய்வீர்களா? இதைச் செய்வீர்களா?'' என்று கேட்டு பிரசாரம் செய்கிறார். ஆனால் நான் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ""வேலை கொடுப்பீர்களா? மின்சாரம் கொடுப்பீர்களா? குடி தண்ணீர் கொடுப்பீர்களா? என கொடுப்பீர்களா? கொடுப்பீர்களா?'' என்றுதான் மக்கள் கேட்கிறார்கள். தமிழக மக்களுக்கு மின்சாரத்தைக் கூட ஒழுங்காகக் கொடுக்க முடியாத ஆட்சிதான் நடந்து வருகிறது. இந்த மக்களவைத் தேர்தல் ஒரு மாற்றத்தை தரக்கூடிய தேர்தலாக இருக்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சி மலர வேண்டும். 2016இல் நான் ஆட்சிக்கு வருவேன். அப்போது படித்தவர்களாக இருந்தாலும் படிக்காதவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் வேலை கொடுப்பேன் என்று விஜயகாந்த் பேசினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai