Enable Javscript for better performance
காரைக்கால் மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் மீனவர்கள் 15 பேரை இலங்கைக் கடற்படையினர் படகுகளுடன் சிறைபிடித்து சென்றது வெள்ளிக்கிழமை இரவு தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் 15 பேரையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரைக்கால் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்த ஜெயபால் தலைமையில் 8 பேரும், கோட்டுச்சேரிமேடு கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி தலைமையில் 7 பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நாகை மாவட்டம், கோடியக்கரை பகுதி அருகே வியாழக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் 15 பேரையும் படகுகளுடன் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த தகவல் காரைக்கால் மீன்வளத் துறைக்கு வெள்ளிக்கிழமை இரவு தெரிய வந்தது.

    இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மீனவரணித் தலைவர் ரவி (எ) நடராஜன் சனிக்கிழமை கூறியது: கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 15 பேரையும் அவர்களின் படகுகளையும் சேதமின்றி விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னையில் புதுச்சேரி அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai