சுடச்சுட

    
    deer

    திருவண்ணாமலை அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மானை வனத்துறை, தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்.

    திருவண்ணாமலையை அடுத்த சின்ன கோலப்பாடி கிராமத்தில் விவசாய கிணற்றில் புள்ளி மான் ஒன்று விழுந்திருந்ததை அப்பகுதி விவசாயிகள் சனிக்கிழமை காலை பார்த்தனர். உடனே இதுகுறித்து திருவண்ணாமலை வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சென்று பொதுமக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மானை கயிறு கொண்டு உயிருடன் மீட்டனர்.

    மீட்கப்பட்ட மானுக்கு சுமார் 3 வயது இருக்கும் என்றும், அதன் வாயில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றும், பின்னர் காட்டுப் பகுதியில் மான் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். கிணற்றில் விழுந்த மானை பார்க்க அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai