சுடச்சுட

  
  vijayakanth_canvas

  தமிழகத்துக்கு பல்வேறு நல்ல திட்டங்கள் கிடைக்க நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும்; தமிழக நன்மைக்காகவே பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்துள்ளேன் என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

  தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் எஸ். ஜோயலை ஆதரித்து விஜயகாந்த் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

  தூத்துக்குடி செல்வநாயகிபுரத்தில் திறந்த வேனில் இருந்தவாறே அவர் பேசியது:

  தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. தொழில்நகரமான தூத்துக்குடியில் இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. தீப்பெட்டித் தொழிலும், உப்பளத் தொழிலும் நலிவடைந்து வருகின்றன.

  அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் சரியாக இல்லை. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.8000 கோடியில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்ட அனல் மின் நிலைய திட்டப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தின் வாழ்வாதாரமான தாமிரவருணி ஆறு இதுவரை தூர்வாரப்படவில்லை. மீனவர்களுக்காக எந்தவித நல்ல திட்டங்களும் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை.

  இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். அவர்தான் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக ஆக்கினார். அவரது காலத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அமைக்கப்பட்ட நான்குவழிச் சாலையைத்தான் நாம் பயன்படுத்தி வருகிறோம்.

  தமிழகத்துக்கு நல்லது நடைபெறும் என்பதற்காகவே பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளேன். மோடி பிரதமரானால் நிச்சயமாக தமிழகத்துக்கு நல்ல திட்டங்களைக் கொண்டுவருவார். ஊழலையும் ஒழிப்பார். இரண்டு ஆண்டுகளுக்குள் நல்ல திட்டங்களைக் கொண்டு வர நான் மோடியிடம் வலியுறுத்துவேன்.

  அதிமுகவும், திமுகவும் மக்களுக்கு நல்லது செய்திருந்தால் நான் கட்சியே தொடங்காமல் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பேன். மக்கள் விரோத ஆட்சி என்றால், காங்கிரஸ் ஆட்சியைத்தான் கூறுவேன். எனவே, மக்கள் சிந்தித்து தேசிய ஜனாயக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai