சுடச்சுட

  

  தலைமைச் செயலகம் உள்பட அரசுத் துறை அலுவலகங்களில் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு தடை

  By dn  |   Published on : 23rd March 2014 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  facebook

  தலைமைச் செயலகம் உள்பட அரசுத் துறை அலுவலகங்களில் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அரசுத் துறைகளின் பல்வேறு அலுவலங்கள் தலைமைச் செயலகம் மற்றும் சென்னை சேப்பாக்கம் எழிலகம் ஆகியவற்றில் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் கம்ப்யூட்டர்களுடன் இணையதள வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

  இந்த இணையதள வசதியைப் பயன்படுத்தி, அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சமூக ஊடகங்களை அலுவலக நேரங்களில் பார்க்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

  அரசுத் துறைகளின் அனைத்து கம்ப்யூட்டர்களிலும் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களைப் பார்க்க முடியாதபடி அவற்றை தடை செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து தேர்தல் துறை அதிகாரிகள் கூறியது: அரசுத் துறைகளில் உள்ளவர்களில் பலரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சமூக ஊடகங்களில் அவர்கள்

  கருத்துகளைத் தெரிவிப்பதும், பதிவு செய்வதும், தேர்தல் பணியின்போது அவர்களது நடுநிலையை பாதிக்கச் செய்யும். எனவே, அலுவலக நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியாதபடி அவை தடை செய்யப்பட்டுள்ளன என்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai