சுடச்சுட

    

    பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும்: இல.கணேசன் நம்பிக்கை

    By dn  |   Published on : 23rd March 2014 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ila-ganesan

    வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நம்பிக்கை தெரிவித்தார்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அவர், தியாகராய நகரில் உள்ள நடேசன் பூங்காவில் நடைப்பயிற்சிக்கு வரும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    பின்னர் தியாகராய நகர், வெங்கட்நாராயணா சாலையில் தென்சென்னை தொகுதி பாஜக தேர்தல் அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி அவர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என விரும்பும் படித்தவர்களும் நடுத்தர மக்களும் அதிகம் வசிக்கும் தொகுதி தென்சென்னை. எனவே, இங்கு பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்திருப்பது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் பாஜகவுக்கு மட்டுமே ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மையான இடங்கள் கிடைக்கும்.

    எனவே, தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் இல்லாத கட்சிகளிடம் ஆதரவு கேட்கும் நிலை ஏற்படாது. அந்த தர்மசங்கடத்தை மக்கள் பாஜகவுக்கு அளிக்க மாட்டார்கள் என்றார் இல.கணேசன்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai