சுடச்சுட

  
  hraja

  நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி, அதிமுக இடையேதான் போட்டி இருக்கும் என்றார் பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா.

  காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தேச நலனுக்காகவும், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்காகவும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார்.

  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது:

  தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் வெற்றி பெறுவது உறுதி. கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்ட அனைத்து கருத்துக் கணிப்பு முடிவுகளும் 60 சதவீதம் பேர் தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் எனவும், நரேந்திர மோடி பிரதமராக விருப்பம் தெரிவித்து கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

  மேலும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது. காங்கிரஸ் கட்சி தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு உதாரணமாக உள்ளது.

  எனவே, நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி, அதிமுக இடையேதான் போட்டி இருக்கும். மற்ற கட்சிகள் மூன்றாம் இடத்துக்கே போட்டியிடுகின்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai