Enable Javscript for better performance
மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் பணியில் அதிநவீன இந்திய போர் விமானம்- Dinamani

சுடச்சுட

    

    மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் பணியில் அதிநவீன இந்திய போர் விமானம்

    By dn  |   Published on : 23rd March 2014 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    plane

    239 பயணிகளுடன் காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணிக்கு இந்திய கடற்படையின் அதிநவீன போர் விமானம் பி8ஐ அரக்கோணம் ராஜாளி தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக அதன் கமாண்டிங் ஆபிஸர் தெரிவித்தார்.

    அண்மையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற மலேசிய விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் மாயமாக மறைந்தது. இதையடுத்து 26 நாடுகளைச் சேர்ந்த விமானங்களும், கப்பல்களும் இந்த விமானத்தை கடல் பகுதியில் தேடி வருகின்றன.

    இந்நிலையில் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதள கமாண்டிங் ஆபிஸர் புனித்குமார் பஹெல் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

    மலேசிய விமானத்தைத் தேடும் பணிக்காக அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி விமானப் படை தளத்தில் இருந்து பி8ஐ எனும் அதிநவீன போர் விமானமும், மற்றொரு விமானமும் சென்றுள்ளன. இதில் ஒன்று அந்தமான் தீவின் தலைநகர் போர்ட்பிளேரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

    மற்றொரு விமானம் மலேசிய டூபாங் விமான தளத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்திய பெருங்கடலில் இரு விமானங்களும் தீவிரமாகத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன என்றார் புனித்குமார் பஹெல்.

    பி8ஐ விமானம் உலகின் அதிநவீன போர் விமானம். கடலில் சுமார் 10 ஆயிரம் அடி ஆழத்தில் இருப்பவற்றைக் கூட இவ்விமானத்தில் உள்ள அதிநவீன கேமரா மூலம் துல்லியமாகப் படமெடுக்கலாம்.

    விமானத்தின் கருப்புப் பெட்டி போன்ற ஒலி சமிக்ஞைகளை உருவாக்கும் கருவிகள் நீரில் பலஆயிரம் அடி ஆழத்தில் இருந்தாலும் அதன் சமிக்ஞைகளை பதிவு செய்து அதனை கைப்பற்றக்கூடிய திறன் இவ்விமானத்துக்கு உண்டு. இந்தியப் பெருங்கடலில் தொடர்ந்து 16 மணி நேரத்துக்கு மேல் நிற்காமல் பகலிலும், இரவிலும் தொடர்ந்து பறக்கும் ஆற்றல் கொண்டது இந்த விமானம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai