சுடச்சுட

    

    வடசென்னை, வல்லூர் யூனிட்டுகளில் மீண்டும் மின் உற்பத்தி

    By dn  |   Published on : 23rd March 2014 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vallurplant

    மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்த வடசென்னை இரண்டாவது ஸ்டேஜில் உள்ள முதல் யூனிட் மற்றும் வல்லூரில் உள்ள இரண்டு யூனிட்டுகளில் சனிக்கிழமை (மார்ச் 22) மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

    அதே நேரத்தில் வியாழன், வெள்ளிக்கிழமையைத் தொடர்ந்து சனிக்கிழமையும் பல்வேறு இடங்களில் கூடுதல் மின்வெட்டு அமலில் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் மின் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை முதல் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வல்லூரில் உள்ள இரண்டு யூனிட்டுகள், வடசென்னை இரண்டாவது ஸ்டேஜில் உள்ள முதல் யூனிட் ஆகியவற்றில் தொழில்நுட்பக் கோளாறுகளால் வியாழக்கிழமை மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இதன் காரணமாக, சென்னையைத் தவிர பிற இடங்களில் அறிவிக்கப்பட்டதை விட கூடுதலாக பல மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.

    வல்லூரில் ஒரு யூனிட்டில் மின் உற்பத்தி வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது. அதே நேரத்தில், தூத்துக்குடியில் உள்ள ஒரு யூனிட்டிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    எனவே, வெள்ளிக்கிழமையும் பல மணி நேர மின்வெட்டு நீடித்தது.

    இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்தில் மின் விநியோகம் சீரடையும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியது:

    வல்லூரில் உள்ள ஒரு யூனிட் மற்றும் வடசென்னை யூனிட் ஆகியவற்றில் சனிக்கிழமை மின் உற்பத்தி செய்யப்பட்டது.

    கூடங்குளத்திலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, இப்போது 600 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வல்லூரில் உள்ள மற்றொரு யூனிட்டில் சனிக்கிழமை மாலை மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

    தூத்துக்குடியில் உள்ள யூனிட்டில் பழுதுபார்க்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    திங்கள்கிழமை காலை இந்த யூனிட்டிலும் உற்பத்தி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அனைத்து யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டாலும் மின் தேவையை முழுமையாக ஈடுசெய்வது கடினம் எனத் தெரிகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai