சுடச்சுட

  

  வாகனச் சோதனையை நிறுத்தாவிட்டால் காய்கறி கொள்முதலை நிறுத்துவோம்: ஏ.எம்.விக்கிரமராஜா

  By dn  |   Published on : 23rd March 2014 11:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vikramaraja

  தமிழகத்தில் வணிகர்கள், விவசாயிகள், அடித்தட்டு மக்களைப் பாதிக்கின்ற வாகனச் சோதனையை ஒரு வார காலத்துக்குள் தேர்தல் ஆணையம் நிறுத்தாவிட்டால் காய்கறி கொள்முதலை நிறுத்துவோம். கடையடைப்புப் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.

  திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் 28-ஆவது ஆண்டு வணிகர் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம். குறிப்பாக உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன போன்ற வணிகர்களுக்கு சாதகமான பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியும், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டும் உள்ள கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

  மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம் வாகனச் சோதனை என்ற பெயரில் வணிகர்கள், விவசாயிகள், சாதாரண அடித்தட்டு மக்களுக்கு பெரிதும் தொந்தரவு கொடுத்து வருகிறது.

  இதுகுறித்து ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளோம். எனவே, வணிகர்கள், விவசாயிகளின் நலன் கருதி ஒரு வாரத்துக்குள் வாகனச் சோதனையை நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், முதற்கட்டமாக காய்கறிகளின் கொள்முதலை நிறுத்துவோம். தொடர்ந்து, அனைத்து அமைப்புகளையும் இணைத்து கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

  முன்னதாக, காமராஜர் சிலையில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வணிகர் தின பேரணியும், நலிந்த வணிகர்களுக்கு நிதியுதவி வழங்கும் விழாவும் நடைபெற்றன.

  சங்கத்தின் தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai