சுடச்சுட

  

  வேட்பாளர்கள் பட்டியலில் குளறுபடி: வாசனுடன் ஞானதேசிகன் ஆலோசனை

  By dn  |   Published on : 23rd March 2014 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vasabn_gnadesigan

  மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் சனிக்கிழமை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

  தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி முதல் கட்டமாக 30 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. முதல் பட்டியலில் வாசன் ஆதரவாளர்கள் பலர் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டனர். இது வாசன், ஞானதேசிகன் ஆகியோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

  இது தொடர்பாக ஞானதேசிகன், குலாம்நபி ஆசாதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

  சிதம்பரம் (தனி) தொகுதியில் ஞானதேசிகன் பரிந்துரைத்த மணிரத்தினம் மாற்றப்பட்டு வள்ளல்பெருமான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

  இதனால் ஆத்திரமடைந்த மணிரத்தினம் ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டனர். அவர்களை அழைத்து சமாதானப்படுத்திய ஞானதேசிகன் சிதம்பரம் (தனி) தொகுதியை மீண்டும் பெற்றுத் தருவதாக உறுதி அளித்துள்ளார்.

  இந்நிலையில் சனிக்கிழமை காலை வாசன் இல்லத்துக்கு வந்த ஞானதேசிகன் வேட்பாளர் தேர்வில் நடந்த குளறுபடிகள் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

  மீதமுள்ள வட சென்னை, தென் சென்னை, திருவள்ளூர் (தனி), தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, கரூர், விழுப்புரம் (தனி), பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளுக்கு தங்களது ஆதரவாளர்களை வேட்பாளர்களாக அறிவிக்க மேலிடத்தை வலியுறுத்துவது என வாசன், ஞானதேசிகன் இருவரும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai