சுடச்சுட

    

    திருவள்ளூர் அருகே இருவேறு பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து 70 பவுன் நகை மற்றும் ரூ. 80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் போலீஸ் எல்லைக்குள்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு (42). இவர் வெளியூர் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த 25 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து மணவாளநகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

    மற்றொரு சம்பவம்: திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டையில் வாகன ஷோரூம் வைத்து நடத்தி வருபவர் கோதண்டனின் மகன் சுரேஷ் (35). இவர் சனிக்கிழமை வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரேவில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் தங்க நகை உள்ளிட்டவை திருடப்பட்டது தெரியவந்தது.

    ஊத்துக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai