சுடச்சுட

    

    இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்: இந்தியா ஆதரிக்க கருணாநிதி வலியுறுத்தல்

    By dn  |   Published on : 24th March 2014 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karunidhi

    இலங்கைக்கு எதிராக ஐ.நா.மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மன்றத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இது உலகத் தமிழர்களின் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றும் அளவுக்கு இல்லை என்ற குறைபாடு உள்ளது.இதற்கிடையில் அந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜெனிவாவில், மனித உரிமை ஆணையத்தில் மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அதன் மீதான வாக்கெடுப்பு மார்ச் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

    இந்த விவாதத்தில் இந்திய அரசு பங்கேற்று, சர்வதேச அளவில் நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையைக் கோரி வலியுறுத்த வேண்டும் என்பது அனைத்து தமிழர்களின் வேண்டுகோளாகும்.

    ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் ஏற்கெனவே இருமுறை தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது, அதனை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது.

    இப்போதும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உள்ள இந்திய பொறுப்பாளர்கள், இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்டுவதாகச் சொல்லப்படுகிறது.இன்றைக்கும் இலங்கை ராணுவம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அச்சத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வருகின்றன. சிங்களர்கள், தமிழர்களுடைய நிலங்களை அபகரித்து, தமிழ் இனத்தின் அடையாளங்களை முற்றிலும் அழித்திடும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த இன அழிப்பை முற்றிலும் நிறுத்திடவும், ஈழத்தில் வாழும் தமிழர்கள் நிம்மதியாக இருக்கவும், சர்வதேச அளவிலான நீதி விசாரணை நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.எனவே அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai