சுடச்சுட

  
  crocodile

  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, ஊருக்குள் புகுந்த 7 அடி நீள முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.

  சிதம்பரம் அருகே சிவாயம் கிராமத்தில், முதலை ஊருக்குள் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

  இதனையடுத்து, வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் தலைமையில் களப்பணியாளர்கள் சுமார் 7 அடி நீளமுள்ள, சுமார் 600 கிலோ எடையுள்ள அந்த முதலையை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த முதலை அருகாமையில் உள்ள வக்காரமாரி குடிநீர்த்தேக்க ஏரியில் பாதுகாப்பாக விடப்பட்டது.

  இதே கிராமத்தில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி வடக்குராஜன் வாய்க்காலில் 10 அடி நீள ராட்சத முதலையை வனத்துறையினர் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai