சுடச்சுட

  
  pc1

  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் ஒரு ஓட்டு போட்டால் உங்களுக்கு பணியாற்ற 2 பிரதிநிதிகள் கிடைக்கப்போகிறார்கள் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வாக்குச்சேகரித்து பிரசாரம் செய்தார்.

  காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை அறிமுகம் செய்துவைத்து, முதல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய அமைச்சர் அங்கு கூடியிருந்த வாக்களர்களிடம் பேசியதாவது:

  2004ஆம் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்றபோது ரூ.65 ஆயிரம்கோடி விவசாயக் கடனை ரத்து செய்தேன். கல்விக்கடன் திட்டம் கொண்டுவரப்பட்டு, கல்லூரி வாயிலை நினைத்துப் பார்க்க முடியாத பலருக்கு அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

  நாம் இதய அறுவைச் சிகிச்சையை 45 வயது டாக்டரிடம் ஒப்படைக்கிறோம். நம் கணக்குகளை 45 வயது ஆடிட்டர் கையில் ஒப்படைக்கிறோம். அதனால் இந்திய அரசியலை ஏன் இளைஞர்கள் கையில் ஒப்படைக்கக்கூடாது.

  அந்த அடிப்படையில்தான் இந்தத் தேர்தலில் இளைஞர்களை வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவெடுத்து கார்த்தி சிதம்பரத்தை உங்கள் முன் வேட்பாளராக அறிமுகப்படுத்துகிறேன். இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் கல்வி பயின்றவர். உங்களுக்காக நாடாளுமன்றத்தில் அவர் திறம்பட பணியாற்றுவார். இங்கே போட்டியிடும் மற்ற வேட்பாளர்களுடன் ஒப்பிட்

  டுப்பார்த்துக் கொள்ளுங்கள்.

  ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்பது போன்று நீங்கள் ஒரு ஓட்டுப் போட்டு இரண்டு பிரதிநிதிகளை பெறப்போகிறீர்கள். ஒருவர் (கார்த்தி சிதம்பரம்) நாடாளுமன்றத்தில் பிரதிநிதியாக பணியாற்றுவார். மற்றொருவராகிய நான் உங்களுடனேயே இருந்து பிரதிநிதியாக பணியாற்றுவேன். எனவே கார்த்தி சிதம்பரத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai