சுடச்சுட

    

    நாட்டின் புதிய கடற்படைத் தளபதியை நியமிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

    இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

    மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் புதிய கடற்படைத் தளபதியை நியமிப்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்தோம். இதையடுத்து தேர்தல் ஆணையம் இதற்கான அனுமதியை அளித்துள்ளது.

    புதிய கடற்படைத் தளபதியை தேர்தெடுப்பதற்கு 5 உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை பாதுகாப்பு அமைச்சகம் அமைத்துள்ளது. வரும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் புதிய கடற்படை தளபதியைத் தேர்வு செய்வதில் இறுதி முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

    நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளானதால் அதற்குப் பொறுப்பேற்று முன்னாள் கடற்படைத் தளபதி டி.கே.ஜோஷி கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி பதவி விலகினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai