சுடச்சுட

  

  காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு

  By dn  |   Published on : 24th March 2014 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

  காஞ்சிபுரம் அருகை வையாவூர் ஊராட்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் மார்ச் 4-ஆம் தேதி திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் மனோன்மணி (35), தணிகைமலை (30) ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் அன்றைய தினமே உயிரிழந்தனர்.

  வெங்கடேசன் (36), மணிமொழி (40) ஆகியோர் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தனர். மார்ச் 9-ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி சங்கர் (49) உயிரிழந்தார்.

  அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சவுந்தரி (42) உயிரிழந்தார். உயிரிழந்த சவுந்தரிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.மேலும் கலா, சரஸ்வதி ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai